வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-‘துணை ஜனாதிபதி தேர்தல், ஆக., 6ம் தேதி நடக்கும். அன்றைய தினமே ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்’ என, தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆக., 10ல் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில், ஆக., 6ல் தேர்தல் நடக்கும் என, தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
அன்றைய தினமே ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.வேட்பு மனு தாக்கல் ஜூலை 5ல் துவங்குகிறது. ஜூலை 19, வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 20 முதல் வேட்பு மனு மீதான பரிசீலனை துவங்குகிறது.
துணை ஜனாதிபதியின் சிறப்பு
l இவர் தான் ராஜ்யசபாவின் தலைவர் l பதவிக்காலம் 5 ஆண்டுகள் l ஜனாதிபதிக்கு அடுத்து 2வது உயரிய பதவி. l ஜனாதிபதி மறைவு, ராஜினாமாவின் போது, பொறுப்பு ஜனாதிபதியாக செயல்படுவார் l ராஜ்யசபாவில் நடக்கும் மசோதா, தீர்மானம் உள்ளிட்ட ஓட்டெடுப்புகளில், ஓட்டளிக்க முடியாது. ஆனால் ஓட்டு எண்ணிக்கை முடிவு சமமாக இருக்கும்போது இவர் வாக்களிக்கலாம் l நாட்டின் பிரதிநிதியாக வெளிநாடுகளுக்கு செல்லலாம்.

Advertisement