ஜேர்மனியில் நீதிமன்ற வாசலில் வெட்டப்பட்ட தலையுடன் உட்கார்ந்திருந்த நபர்: அதிரவைத்த ஒரு சம்பவம்


ஜேர்மனியில், நீதிமன்றம் ஒன்றின் வாசலில் வெட்டப்பட்ட மனிதத் தலை ஒன்றை வைத்துவிட்டு அமைதியாக உட்கார்ந்திருந்த ஒருவரை பொலிசார் கைது செய்தனர்.

ஜேர்மனியின் Bonn நகரில், மாவட்ட நீதிமன்றத்துக்கு நேற்று மாலை 5.40 மணியளவில் வந்த ஒரு நபர் தன் கையிலிருந்த ஒரு பொருளை நீதிமன்ற வாசலில் வைத்துவிட்டு சற்று தள்ளி அமர்ந்துகொண்டுள்ளார். அது ஒரு மனிதத் தலை!

அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக பொலிசாரை அழைக்க, உடனடியாக அவரை கைது செய்தனர் பொலிசார்.

இதற்கிடையில், அவர் கைது செய்யப்பட்ட இடத்துக்கு ஒரு மைல் தொலைவில், நதிக்கரையில், தலையில்லாத ஒரு உடலை பொலிசார் கைப்பற்றியுள்ளார்கள்.

கொல்லப்பட்டவர் யார், எதற்காக அவரை அந்த நபர் கொலை செய்தார் என்பது குறித்த எந்த விவரங்களும் வெளியாகவில்லை.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்களும் பொலிசாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளார்கள்.
 

ஜேர்மனியில் நீதிமன்ற வாசலில் வெட்டப்பட்ட தலையுடன் உட்கார்ந்திருந்த நபர்: அதிரவைத்த ஒரு சம்பவம் | Mystery Severed Human Head Dumped Courthouse Bonn

ஜேர்மனியில் நீதிமன்ற வாசலில் வெட்டப்பட்ட தலையுடன் உட்கார்ந்திருந்த நபர்: அதிரவைத்த ஒரு சம்பவம் | Mystery Severed Human Head Dumped Courthouse Bonn



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.