ஜேர்மனியில் காணாமல் போன சிறுவன் எட்டு நாட்களுக்குப் பிறகு சாக்கடையில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டான்.
ஜோ என்று மட்டுமே பெயரிடப்பட்ட 8 வயது சிறுவன் ஜூன் 17 அன்று ஓல்டன்பர்க்கில் உள்ள தனது குடும்பத் தோட்டத்திலிருந்து காணாமல் போனான். அதனைத் தொடர்ந்து பொலிஸார் பாரிய தேடுதல் வேட்டையை தொடங்கியது.
எட்டு நாட்கள் தொடர் தேடத்தலுக்குப் பிறகு, இறுதியாக சனிக்கிழமை காலை, வழிப்போக்கர் ஒருவர் மூடிக்கிடந்த பாதாள சாக்கடையில் இருந்து சத்தம் கேட்டபோது அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
சிறுவன் காணாமல் போன நாளில் சாக்கடையில் ஊர்ந்து சென்றதாகக் கூறிய பொலிஸார், வேறு எந்த தவறான குற்றங்களும் இதற்கு பின் நடக்கவில்லை என இப்போது நிராகரித்துள்ளனர்.
சிறுவனின் வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் இருந்த சாக்கடையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சிறுவனை மீட்டனர். அவர் ஹைப்போதெர்மியாவால் பாதிக்கப்பட்டிருந்ததால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் பெரிய காயங்கள் எதுவும் இல்லை. அவர் தற்போது நல்ல நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சிறுவன் எப்படி சாக்கடைக்குள் விழுந்திருப்பார் என்று விசாரணைகள் நடந்து வருகிறது.