திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த ரியல் எஸ்டேட் புரோக்கரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர்.
ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்த பாலசுப்பிரமணி என்ற அந்த நபர், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
பெற்றோர் குலதெய்வ கோவிலுக்கு சென்றிருந்த நிலையில், நள்ளிரவில் அவரது வீட்டிற்குள் புகுந்த கும்பல் பாலசுப்பிரமணியை கத்தியால் வெட்டி படுகொலை செய்து விட்டு, அவரது இருசக்கர வாகனத்துடன் தப்பியது.