புதுடில்லி: துணை ஜனாதிபதி தேர்தல், ஆக., 6ம் தேதி நடக்க உள்ளது. ஜனாதிபதி போல, துணை ஜனாதிபதிக்கான தேர்தலும் மறைமுக தேர்தல் தான். ஜனாதிபதி தேர்தலை போல எம்.எல்.ஏ.,க்கள் இதில் ஓட்டளிக்க முடியாது. லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள் ஓட்டளித்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வர்.
யார் போட்டியிடலாம்?
* இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
* 35 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்
* ராஜ்யசபா எம்.பி., ஆவதற்கான தகுதி பெற்றிருக்க வேண்டும்
* எம்.பி., / எம்.எல்.ஏ., / மத்திய – மாநில அரசு ஊழியர்களாக இருக்கக்கூடாது. ஒருவேளை பதவியில் இருந்தால், போட்டியிடும் முன் அதை ராஜினாமா செய்ய வேண்டும்
* போட்டியிடுபவரின் வேட்பு மனுவை தலா 20 எம்.பி.,க்கள் முன்மொழிய, வழிமொழிய வேண்டும்
* டிபாசிட் தொகை 15,000 ரூபாய்.
துணை ஜனாதிபதியின் சிறப்பு
* இவர் தான் ராஜ்யசபாவின் தலைவர்
* பதவிக்காலம் 5 ஆண்டுகள்
* ஜனாதிபதிக்கு அடுத்து 2வது உயரிய பதவி.
* ஜனாதிபதி மறைவு, ராஜினாமாவின் போது, பொறுப்பு ஜனாதிபதியாக செயல்படுவார்
* ராஜ்யசபாவில் நடக்கும் மசோதா, தீர்மானம் உள்ளிட்ட ஓட்டெடுப்புகளில், ஓட்டளிக்க முடியாது. ஆனால் ஓட்டு எண்ணிக்கை முடிவு சமமாக இருக்கும்போது இவர் வாக்களிக்கலாம்
* நாட்டின் பிரதிநிதியாக வெளிநாடுகளுக்கு செல்லலாம்.
Advertisement