நடிகை மீனாவின் கணவர் மரணம்: கொரோனா பக்கவிளைவுகள் காரணமா?

உடல்நலக்குறைவு காரணமாக நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு காலமானார். அவரது இறப்புக்கு பல்வேறு மருத்துவ காரணங்கள் கூறப்படுகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த மீனா, கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் குழந்தை நட்சத்திரங்களாக `தெறி’ `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

image

இந்நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு சில மாதங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்ததாகவும், அவர் அதிலிருந்து குணமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவருக்கு ஏற்கெனவே நுரையீரல் அலர்ஜி இருந்ததால், கொரோனாவுக்குப் பின் அது தீவிரமடைந்ததாக சொல்லப்படுகிறது. சில தினங்களுக்கு முன் திடீரென அவரும் நுரையீரலில் தொற்று அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாமல்போய் உள்ளது. இதன் விளைவாக அவரது ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் உயிரிழந்தார்.

image

இந்நிலையில் வித்தியாசாகர் மரணத்திற்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர். இவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.