நம்ம ஊரு முறுக்குக்கு வந்த சோதனையை பார்த்தீங்களா..?

இந்தியாவில் பல ஆண்டுகளாகவே மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரம் என்பது மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக நம் மக்களின் உணவு கலாச்சாரம் என்பது மிகப்பெரிய அளவில் மாற்றம் கண்டு வருகின்றது.

இது நம்மூர் சிறு வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் மத்தியில் எந்த அளவுக்கு தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு காலத்தில் நமது தாத்தா மார்கள் கடைகளுக்கு சென்றாலோ அல்லது குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் ஸ்னாக்ஸ் என்றாலே அதில் முறுக்கு, மிக்சர் என பலவும் அடங்கும். இது நம்மவர்களின் கையால் செய்யப்பட்ட திண்பண்டங்கள்.

மணப்பாறை முறுக்கு-கிற்கு வந்த சோதனையை பார்த்தீங்களா..!

மாறிப்போன கலாச்சாரம்

மாறிப்போன கலாச்சாரம்

ஆனால் இன்று அப்படியில்லை, பெட்டி கடை முதல் அடுக்கு மாடியில் உள்ள ஷாப்பிங் மால்கள் வரையில் சரம் சரமாக காற்று நிரப்பப்பட்ட பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் லேஸ், குர்குரே, கிராக்ஸ், பிங்கோ என அடங்கும். குழந்தைகளும் அதனை தான் வாங்கி தர அடம் பிடிக்கின்றன.

மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம்

மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம்

இது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்றாலும் அதனைத் தான் நாமும் வேறு வழியின்றி வாங்கிக் கொடுக்கிறோம். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 5 ஸ்னாக்ஸ்களில் 3 மேற்கத்திய நாடுகளுடையது. இரண்டு தான் இந்திய பிராண்டுகள் என ஆய்வுகள் கூறுகின்றன. இதில் வேதனையளிக்கும் விஷயம் என்னவெனில் ஒன்றிரண்டு இருக்கும் இந்திய பிராண்டுகளும் மேற்கத்திய நாடுகள் வசம் சென்று விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்திய பண்டங்களுக்கு போட்டி
 

இந்திய பண்டங்களுக்கு போட்டி

மக்களின் இந்த பெரும் மாற்றத்தின் மத்தியில் இந்திய பாரம்பரிய உணவுகளான ஆலு புஜியா, முறுக்கு, மக்கானே போன்றவற்றை, மேற்கத்திய நாடுகள் கைபற்றி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கு எதிராக லேஸ், பிங்கோ, குர்குரே, பிரிங்கிள்ஸ் போன்றவை உருவெடுத்து வருகின்றன. இதனால் இந்திய ஸ்னாக்ஸ்கள் தங்களது பலத்தினை இழக்க தொடங்கியுள்ளன.

இந்திய சந்தையில் ஆதிக்கம்

இந்திய சந்தையில் ஆதிக்கம்

பெப்சிகோ, ஐடிசி, டிஎஃப் எம் ஃபுட்ஸ், பிரதாப் ஸ்னாக்ஸ் மற்றும் இன்னும் சில நிறுவனனங்கள் இந்த துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தியாவின் ஸ்னாக்ஸ் சந்தையானது சுமார் 41,000 கோடி ரூபாயாக உள்ளது.

இதில் பெப்சிகோ – லேஸ் மற்றும் குர்குரே

ஐடிசி – பிங்கோ

பிரதாப் ஸ்னாக்ஸ் – யெல்லோ டைமண்ட்

டிஎஃப் எம் ஃபுட்ஸ் – கிராக்ஸ்

 

பொலிவிழப்பு

பொலிவிழப்பு

பல்வேறு விதமான சுவைகளில், வலுவான விற்பனை மற்றும் பல்வேறு விலைகளில் உள்ள பேக்குகள், என பலவும் மக்களை கவர முக்கிய காரணிகளாக உள்ளன. ஐடிசி தனது சந்தையில் வலுவாக இருந்து வருகின்றது. எனிலும் டிஎஃப்எம் ஃபுட்ஸ், பாலாஜி வோபர்ஸ், பிரதாப் ஸ்னாக்ஸ், மையாஸ், லக்ஷ்மி ஸ்னாக்ஸ் மற்றும் சில நடுத்தர அளவிலான நிறுவனங்கள், படிப்படியாக சரிவினைக் காணத் தொடங்கியுள்ளன.

அதிகரிக்கலாம்

அதிகரிக்கலாம்

அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் காரணமான சந்தையானது 71,500 கோடி ரூபாயாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இந்த சந்தையானது 19,600 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் ஸ்னாக்ஸ் சந்தையில் ஹல்திராம் முன்னிலையில் உள்ளது. இது தவிர பிகாஜியும் சந்தையில் சிறந்த போட்டியளராக உள்ளது.

 

சிறிய கடைகள் கணக்கில் இல்லை

சிறிய கடைகள் கணக்கில் இல்லை

எனினும் மேற்கண்ட தரவுகளில் சிறிய கடைகளில் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்கள், கிரானா கடைகள் என பலவும் சேர்க்கப்படவில்லை. இது முறைப்படுத்தப்படாத மிகப்பெரிய சந்தையாக உள்ளது. மொத்த சந்தையின் அளவு என்பது கூட சரியாக அளவிட முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரம் என்பது இந்திய சந்தையில் பெரியளவில் ஊடுருவ தொடங்கியுள்ளது.

இந்தியாவின் பங்கு?

இந்தியாவின் பங்கு?

மேற்கத்திய நாடுகளின் ஸ்னாக்ஸ் சுமார் 58.3% பங்களித்து வருகின்றன. ஆனால் இந்திய ஸ்னாக்ஸ்களின் பங்கானது பாதிக்கும் கீழாக குறைந்துள்ளது. இந்தியாவில் 10 ஸ்னாக்ஸ்களில் 6 அண்டை நாடுகளை சேர்ந்ததாகவும், 3 இந்தியாவின் பாரம்பரிய ஸ்னாக்ஸ் ஆகவும், ஒன்று புஜியாகவும் உள்ளது.

ஏன்? என்ன காரணம்?

ஏன்? என்ன காரணம்?

இது நகரமயமாக்கல் அதிகரிப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் காரணமாக அதிகரித்துள்ளது. மொத்தத்தில் நம்மூர் கைமுறுக்களையும், மிக்சர்களையும் மக்கள் மறக்கத் தொடங்கி விட்டனர். இப்படியே செல்லும் பட்சத்தில் இந்திய நிறுவனங்கள் அண்டை நாடுகளின் வசம் செல்ல வேண்டியிருக்கும் என்பது மறுக்க முடியா உண்மை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: snacks

English summary

Lays, kurkure and bingo are taking over indian snacks like murukku, Aloo bhujia

Culture of Western countries is beginning to infiltrate the Indian market on a large scale. Indian dominance in the snack market in particular is declining. If this goes on, the Indian market will have to go to its neighbors.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.