அனைத்து பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள், சென்சார் பொருத்துவது தொடர்பாக சட்ட திருத்தம் கொண்டுவருவதற்கு பொதுமக்கள் கருத்தை கேட்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பள்ளி வாகனங்களில் முன்புறமும் பின்புறமும் சென்சார் கேமராக்கள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் பள்ளி வாகனங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறதா என்பது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில் பள்ளி வாகனங்களில் கேமராக்கள், சென்சார் பொருத்துவது குறித்து ஆட்சேபனைகள் எதாவது இருந்தால் ஜூலை 15 வரை தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளி வாகனத்தில் பின் முன் பகுதிகளில் கேமராக்கள் இருக்கவேண்டும். ஓட்டுநர் பின் நோக்கி வண்டியை எடுக்கும்போது மாணவர்கள் இருந்தால் ஒலி எழுப்பும் வகையில் சென்சார் பொருத்தி இருக்க வேண்டும் என்றும் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதாக சட்ட திருத்த வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-எம்.ரமேஷ்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM