இஸ்லாமாபாத்,
அதிக பணவீக்கம், அந்நிய செலாவணி கையிருப்பு சரிவு, விரிவடையும் நடப்பு கணக்கு பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் பாகிஸ்தான் சிக்கித் தவித்து வருகிறது.
இந்நிலையில் சீனா தனது அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க பாகிஸ்தானுக்கு 2.5 பில்லியன் டாலர் நிதி உதவியை வழங்குகிறது. இதனால் பாகிஸ்தானின் நிதி மற்றும் அதன் குறைந்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஜி20 டெப்ட் சர்வீஸ் சஸ்பென்ஷன் முன்முயற்சியின் (டிஎஸ்எஸ்ஐ) கீழ் 107 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனை நிறுத்தி வைப்பதற்கான ஒப்பந்தத்தில் பிரான்ஸ் பாகிஸ்தானுடன் கையெழுத்திட்டதை அடுத்து, சீனாவின் இந்த உதவி குறித்த அறிவிப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.