பாகிஸ்தான் திவாலாகிறதா.. கொடூரமான பணவீக்கம், கரன்சி வீழ்ச்சி தான் காரணமா?

பாகிஸ்தான் திவால் நிலைக்கு தள்ளப்படலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை, மோசமான பணவீக்கம், தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் கரன்சி மதிப்பு என பல காரணிகளுக்கு மத்தியில் திவால் நிலைக்கு தள்ளப்படலாம் என அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தான் மற்றும் சர்வதேச நாணய நிதியம் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், 6 பில்லியன் டாலர் நிதி திரட்ட பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது. எனினும் இதுவரையில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.

NSE-க்கு 7.. சித்ரா ராமகிருஷ்ணா-வுக்கு 5.. செபி போட்ட தடாலடி அபராதம்..! #DarkFiber

அன்னிய செலாவணி கையிருப்பு

அன்னிய செலாவணி கையிருப்பு

இதற்கிடையில் பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பானது ஜூன் 21 அன்றும் 212 ஐ தாண்டியது. அதேசமயம் இலங்கையை போலவே பாகிஸ்தானின் அன்னிய செலாவணி கையிருப்பும் குறைந்து வருகின்றது. இதனால் தற்போதைய நிலவரப்படி அன்னிய செலாவணி கையிருப்பு 9 பில்லியன் டாலருக்கு கீழாக உள்ளது.

பாகிஸ்தான் ரூபாய்

பாகிஸ்தான் ரூபாய்

கடந்த ஆண்டிலேயே பாகிஸ்தானின் கரன்சி மதிப்பானது 34% சரிவினைக் கண்டுள்ளது. இது பெரியளவில் சரிவினைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஜுன் மாதத்தில் 157.54 பாகிஸ்தானிய ரூபாயாக இருந்தது. இதற்கிடையில் நடப்பு ஆண்டில் மோசமாக சரியும் நாணயங்களில் ஒன்றாக உள்ளது.

பலத்த சரிவில் நாணயம்
 

பலத்த சரிவில் நாணயம்

டிசம்பர் 2001ல் இருந்து இந்த கரன்சியின் மதிப்பானது 13 நாணயங்களுக்கு எதிராக 16.5% சரிவினைக் கண்டுள்ளது. ET அறிக்கையின் படி ஜப்பானிய யென், தென் கொரியாவின் வோன், பங்களாதேஷின் டாக்கா உள்ளிட்ட பலவும் பலத்த சரிவினைக் கண்டுள்ளது. அதில் பாகிஸ்தானின் ரூபாயும் ஒன்று.

நடப்பு கணக்கு பற்றாக்குறை

நடப்பு கணக்கு பற்றாக்குறை

 

பணவீக்கம், கரன்சி வீழ்ச்சி, அன்னிய செலாவணி கையிருப்பு சரிவு என பல காரணிகளுக்கு மத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறையும் மிக மோசமாக அதிகரித்துள்ளது.

 

பாகிஸ்தானின் ஸ்டேட் பாங்க் கையிருப்பும் நவம்பர் 2019ல் இருந்து மோசமான சரிவினைக் கண்டுள்ளது. அதோடு பாகிஸ்தானின் மக்கள் தொகையும் அதன் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையை ஏற்று மூன்றாவது முறையாக எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விலை அதிகரிப்பின் மத்தியில் பாகிஸ்தானில் பல சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

பெட்ரோல் விலை மட்டும் 56% உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலையானது 83% அதிகரித்துள்ளது. இது சாமானிய மக்கள் மீது பெரும் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சீனா விருப்பம்

சீனா விருப்பம்

இது எல்லாவற்றிற்கும் மத்தியில் பாகிஸ்தானுக்கு 2 பில்லியன் டாலர் மேல், புதிய வணிக கடன்களை வழங்க சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் பணவீக்கம், எரிபொருள் மற்றும் உணவு பொருட்களின் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதது, சிறு வணிகங்கள் மூடப்படுவது மற்றும் மோசமான அரசியல் நெருக்கடி ஆகியவை பாகிஸ்தானின் மோசமான சரிவினைக் கண்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Pakistan starting at bankruptcy amid low forex reserves, currency fall, high inflation

It is feared that Pakistan could be plunged into bankruptcy amid a number of factors, including the economic situation, poor inflation and the continuing declining currency value.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.