சீருடை விதிகளை மீறும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பணியில் உள்ள மின்வாரிய ஊழியர்கள் சீருடை விதிகளை கட்டாயம் பின்பற்ற மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி `பெண்கள், சேலை மற்றும் துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து கொள்ளலாம். பணியில் உள்ள ஆண்கள், பார்மல் பேண்ட், வேட்டி மற்றும் தமிழக, இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் எந்த உடையையும் அணியலாம். கேசுவல் உடை அணியக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தில் ஆஜராக வேண்டியிருந்தால், முழுக் கையுடன் கூடிய சிறியளவில் பட்டன் வைத்த கோட் அணிய வேண்டும். பட்டன் இல்லாத கோட் அணிய ஊழியர் விரும்பினால் கண்டிப்பாக டை அணிய வேண்டும்.
உடையின் நிறமும், டிசைனும் சாந்தமான வகையில் இருக்க வேண்டும். பெண்களைப் பொறுத்தவரை சாந்தமான நிறத்தில் துப்பட்டாவுடன் சுடிதார், சேலை போன்றவற்றை அணியலாம். அலுவலகத்தின் கண்ணியம், ஒழுக்கம் போன்றவற்றை பேணும் வகையில் அனைத்து ஊழியர்களும் இந்த உத்தரவை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்’ எனக்கூறப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல்களை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
– செய்தியாளர்: ரமேஷ்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM