மாட்ரிட்:உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதையடுத்து, போலந்து நாட்டில் நிரந்தர ராணுவ தளம் அமைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் மாட்ரிட் நகரில், ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பின் மாநாடு நடந்து வருகிறது .மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேட்டோ பொதுச்செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கை சந்தித்து பேசினார்.பின்னர் ஜோ பைடன் கூறியதாவது:
நேட்டோ வலுவானது மற்றும் ஒன்றுபட்டது. இம்மாநாட்டில் நாங்கள் எடுக்கும் நடவடிக்கைளால், எங்கள் கூட்டு பலத்தை மேலும் அதிகரிக்கப் போகிறோம்.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால், ஐரோப்பாவில் எங்கள் படை பலத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்
போலந்தில் ஒரு நிரந்தர ராணுவ தளத்தை அமெரிக்கா அமைக்க உள்ளது. பிரிட்டனுக்கு கூடுதலாக இரண்டு ‘எப்- 35’ ரக போர் விமான படைகளை அனுப்ப உள்ளோம். அமெரிக்கா பால்டிக் பிராந்தியத்திற்கு சுழற்சி முறையில் வீரர்களை அனுப்பி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement