மஹா., அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் அசாம் வெள்ள நிவாரணமாக ரூ.51 லட்சம் அளிப்பு| Dinamalar

கவுஹாத்தி: மஹாராஷ்டிரத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுமார் 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள விடுதியில் கடந்த சில நாட்களாக தங்கியுள்ளனர். அதேநேரத்தில், அசாமில் வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அந்த மாநில மக்களுக்கு அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் சார்பில் முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.51 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.