சென்னை : மின்வாரிய பணியாளர்கள் சீருடை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. அலுவலகத்துக்கு கேஷுவல் உடை அணிந்து வர கூடாத, பெண்கள் சேலை, சல்வார், துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்து கொள்ளலாம், வேட்டி, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உடைகளை ஆண்கள் அணியலாம் என்று தெரிவித்துள்ள மின் வாரியம், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.