முடிவை தள்ளி வைத்தது ஜிஎஸ்டி கவுன்சில்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சண்டிகர்: ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டம், லாட்டரி, குதிரை பந்தயம் போன்றவற்றிற்கு 28 சதவீத வரி விதிப்பது தொடர்பான முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் ஒத்திவைத்துள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் 2 நாட்களாக நடந்து வந்தது.

கூட்டம் நிறைவடைந்த பின்னர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது: சூதாட்டம், லாட்டரி, ஆன்லைன் விளையாட்டுகள், குதிரை பந்தயம் உள்ளிட்டவற்றிற்கு 28 சதவீத வரி விதிப்பது தொடர்பான முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா தலைமையிலான அமைச்சர்கள் குழு, சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் ஜூலை 15ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

latest tamil news

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மீண்டும் ஆகஸ்ட் முதல் வாரம் நடக்கும். சரக்கு போக்குவரத்திற்கான வரியை குறைக்க கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.