இனி வரும் நாட்களில் பல தொடருந்துகள் இரத்துச் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து ஊழியர்கள் தமது பணியிடங்களுக்குச் செல்வதற்கு எரிபொருள் இல்லாமல் திண்டாடி வருவதாக கூறப்படுகின்றது.
இதன்காரணமாக பாரிய ஊழியர் பற்றாக்குறை நிலவுகின்றது.
இரத்துச் செய்யப்படும் தொடருந்து சேவைகள்
இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் மேலும் பல தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு எதிர்நோக்கும் பிரச்சினையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று (29) மற்றும் நேற்று (28) பல தொடருந்து சேவைகளை இரத்து செய்ய நேரிட்டதாகவும் எதிர்வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.