ரயில் சேவை கட்டணங்களில் திருத்தம்: அமைச்சரவை அனுமதி

 

 

ரயில் சேவை கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

 

ரயில் பயணிகள் போக்குவரத்துக் கட்டணம், சரக்குகள் போக்குவரத்து மற்றும் தபால் போக்குவரத்து நடவடிக்கைகள் மற்றும் ஏனைய சரக்குகள் போக்குவரத்துக்காக அறவிடப்படும் ரயில் கட்டணங்களில் திருத்தம் செய்வதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இது தொடர்பாக 27.06.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

03. புகையிரதப் போக்குவரத்துக் கட்டணங்களைத் திருத்தம் செய்தல்

அரச கொள்கைகளுக்கு அமைய பயணிகள் போக்குவரத்துக்காக இலங்கைப் புகையிரதத் திணைக்களம் சலுகை அடிப்படையிலான கட்டண முறையைப் பின்பற்றுகின்றது. ஆனாலும், அண்மைக் காலங்களில் எரிபொருள் விலையில் ஏற்பட்ட அதிகரிப்புக்களால் திணைக்களத்தின் மீண்டெழும் நட்டங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு செல்கின்றமையால், திருப்திகரமான புகையிரத சேவைகளை மேற்கொண்டு செல்வதற்கு இயலுமை கிட்டும் வகையில் திணைக்களம் ஈட்டுகின்ற வருமானத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது.

அதற்கமைய, ஐந்து (05) வருடங்களுக்கும் மேலாக திருத்தம் செய்யப்படாத புகையிரதப் பயணிகள் போக்குவரத்துக் கட்டணம், பதினான்கு (14) வருடங்களுக்கு மேலாக திருத்தம் செய்யப்படாத சரக்குகள் போக்குவரத்து மற்றும் தபால் போக்குவரத்து நடவடிக்கைகள் மற்றும் ஏனைய சரக்குகள் போக்குவரத்துக்காக அறவிடப்படும் புகையிரதக் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.