மாஸ்கோ,
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததன் காரணமாக பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தன. இதன்காரணமாக ரஷியாவின் ரூபிள் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில்,அமெரிக்க டாலருக்கு எதிராக ரஷியாவின் அந்நிய செலவாணி மதிப்பானது 52.9 ஆக உள்ளது.
இது குறித்து ரஷிய பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் மாக்சிம் ரெஷெட்னிகோவ் கூறுகையில், ” கடந்த 7 ஆண்டுகள் இல்லாத அளவில் ரஷியாவின் ரூபிள் மதிப்பு வீழ்ச்சி அடைந்து உள்ளது. இந்த போக்கு நீடித்தால் நாட்டில் வணிகங்கள் பாதிக்கப்படலாம்.
ஏற்றுமதி சார்ந்த பல தொழில்களின் லாபம் தற்போது எதிர்மறையாக மாறியுள்ளது. இதனை உறுதிப்படுத்துவார்கள் என நினைக்கிறேன். இன்னும் பல மாதங்களுக்கு இதுபோன்ற நிலை நீடித்தால், முதலீட்டு செயல்முறைகளைக் குறைப்பது மட்டுமல்லாமல், தற்போதைய உற்பத்தித் திட்டங்களை சரிசெய்து உற்பத்தி அளவைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் பல நிறுவனங்கள் வரக்கூடும் என்று நான் நினைக்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.