ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் பதவியிலிருந்து முகேஷ் அம்பானி ராஜினாமா செய்துள்ளார். முகேஷ் அம்பானியின் இடத்தில் அவரது மகன் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ இயக்குநர்கள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட இம்முடிவு பங்குச்சந்தைகளுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தில் தமது வாரிசுகள் மெல்லமெல்ல கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள் என முகேஷ் அம்பானி கடந்தாண்டே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM