கனடாவில் வங்கியைக் கொள்ளையடிக்க முயற்சி செய்த இரண்டு பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க எல்லை அருகில் உள்ள சானிச் என்னுமிடத்தில் உள்ள ஒரு வங்கியில் இரண்டு பேர் துப்பாக்கியுடன் புகுந்து வாடிக்கையாளர்களை மிரட்டி பணம்கொள்ளையடிக்க முயற்சித்தனர்.
பாதுகாப்பு படையினர் அவர்களை சுட்டுத் தள்ளினர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 6 போலீசார் காயம் அடைந்தனர். அப்பகுதியில் வெடிகுண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அக்கம் பக்கம் குடியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்