பாலக்காடு அருகே வாய்தகராறு முற்றியதில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு பள்ளிக்குறுப்பை சேர்ந்தவர் அவினாஷ், 30. இவரது மனைவி கோவையைச் சேர்ந்த தீபிகா 28. மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமான இத்தம்பதியருக்கு, ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. நேற்று காலை தம்பதியர் இடையே தகராறு நடந்துள்ளது. ஆத்திரமடைந்த அவினாஷ், மனைவியை அரிவாளால் வெட்டியுள்ளார்.
அலறல் சப்தம் கேட்டு அருகில் குடியிருப்போர் ஓடிவந்து பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் கிடக்கும் தீபிகாவை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பெரிந்தல்மண்ணா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். தப்ப முயன்ற அவிநாஷை ஊர் மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.
பாலக்காடு அருகே வாய்தகராறு முற்றியதில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு பள்ளிக்குறுப்பை சேர்ந்தவர் அவினாஷ், 30.
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.