சென்னை: உத்தர பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜ் முகம்மது என்பவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இவர் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் உறுப்பினர் என கைது செய்த ஏடிஎஸ் போலீஸார் தெரிவித்தனர். ஆனால், எங்கள் அமைப்புக்கும் இவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மறுத்துள்ளது.