வேலூரில் 53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
வேலூர் பாலாற்றங்கரையில் 9 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் 82 கடைகள், இரண்டு உணவகங்கள், பயணிகள் காத்திருப்பு அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
பேருந்து நிலையத்தின் மேற்கூரையில் சூரிய ஒளி மின்னுற்பத்திக்கான தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.