ஹோட்டல் ரூம் முதல் வங்கி காசோலை கட்டணம் வரை.. என்னவெல்லாம் அதிகரிக்க போகிறது?

ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறவுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கியுள்ள கூட்டத்தில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

தமிழ்நாடு உடன் 4 மாநிலங்கள் போட்டி.. மகாராஷ்டிரா வேற இருக்குதே..! எதற்காக தெரியுமா..?

இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரிப்பா?

அதிகரிப்பா?

இதற்கிடையில் இந்த கூட்டத்தில் பல அம்சங்களுக்கான வரியை அதிகரிக்கவும், சிலவற்றிற்கான வரியினை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல இரண்டாவது நாளான இன்று கேரளா, டெல்லி மற்றும் உள்ளிட்ட மாநிலங்கள் ஜிஎஸ்டி இழப்பீடு குறித்து கேட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 கோரிக்கைகள் ஏற்பு?

கோரிக்கைகள் ஏற்பு?

ஜிஎஸ்டி கவுன்சிலில் இந்த கூட்டத்தில் சில வரி விலக்குகளை திரும்ப பெற்றுள்ளதாகவும், மாநிலங்களின் அமைச்சர்களின் கோரிக்கைகளை ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தகவல்காள் வெளியாகியுள்ளன.

என்னவெல்லாம் அதிகரிக்கலாம்?
 

என்னவெல்லாம் அதிகரிக்கலாம்?

இறைச்சி, மீன்,தயிர், பன்னீர் மற்றும் தேன் போன்ற முன்பே பேக் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் லேபிள் இடப்பட்ட உணவு (Except Frozen) தவிர மற்றவைக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்படலாம்.

வங்கிகள் வழங்கும் காசோலைகளுக்கு விதிக்கப்படும் கட்டணங்களுக்கு இனி ஜிஎஸ்டி விதிக்கப்படும்.

காசோலைகளை வழங்குவதற்கு வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்திற்கு 18% வரி விதிக்கப்படலாம் என தெரிகிறது.

உலர்ந்த பருப்பு காய்கறிகள், உலர்ந்த மக்கானா, கோதுமை மற்றும் பிற தானியங்கள், கோதுமை அல்லது மெஸ்லின் மாவு, வெல்லம், அரிசி (Muri), அனைத்து பொருட்கள் மற்றும் கரிம உரங்கள், தென்னை நார் உரம் ஆகியவற்றிற்கும் தற்போது 5% வரி விதிக்கப்படலாம்.

மேப்கள் மற்றும் சார்ட்களுக்கு 12% வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளொன்றுக்கு 1000 ரூபாய்க்கும் குறைவான ஹோட்டல் அறைகளுக்கு 12% வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 வரி விலக்கு இல்லையா?

வரி விலக்கு இல்லையா?

பேக் செய்யப்படாத பொருட்கள் மற்றும் லேபிள் இல்லாத, பிராண்ட் அல்லாத பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து வரி விலக்கு அளிக்கபப்டலாமென்றும் கூறப்படுகின்றது.

பரிந்துரை?

பரிந்துரை?

சமையல் எண்ணெய், நிலக்கரி, எல்இடி விலக்குகள், பிரிண்டிங், வரைதல் இன்க், தோல், சோலார் வாட்டர் ஹீட்டர் உள்ளிட்டவற்றிற்கும் வரியில் மாற்றம் செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

இதனுடம் ஆன்லைன் கேம், கேசினோக்கள் உள்ளிட்டவற்றிற்கும் 28% வடி வீதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gst ஜிஎஸ்டி

English summary

GST: From hotel rooms to bank cheque leaf charges, what will get costlier or cheaper?

At the GST Council meeting, it is likely that taxes will be increased on bank cheques, hotel rooms and other food items.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.