வவுனியா, வேப்பம்குளம் பகுதியில் உள்ள கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில், சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லீற்றர் டீசலுடன் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக டீசல் சேகரிக்கும் வியாபாரி ஒருவர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக நெளுக்குளம் பொலிசார் அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் சட்டவிரோதமான முறையில் 15 பீப்பாய்கள் டீசல் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு எரிபொருளை சேகரிக்கும் சட்டவிரோத வியாபாரிகள் ஒரு லீற்றர் டீசலை 600 முதல் 800 ரூபா வரை விற்பனை செய்வதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.