திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே நிச்சயித்த மாப்பிள்ளை வீட்டில் சைவ விருந்து சாப்பிட்ட 19 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மாரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் மகன் அரங்கநாதன், 28; கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேல்இருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் மகள் கமலா, 24; இவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.நேற்று மதியம் மாரங்கியூரில் உள்ள மாப்பிள்ளை வீட்டில், மணமகள் வீட்டாருக்கு சைவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
விருந்தில் பங்கேற்ற உத்திராபதி, 42; இவரது மகன் சரவணன், 15; கோவிந்தசாமி மகன் சிவகுமார், 19; நடராஜன் மகன் முகேஷ், 16; கோவிந்தசாமி மகன் கமலேஷ், 22; உட்பட 19 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.உடன், மாப்பிள்ளை வீட்டார் 8 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், பெண் வீட்டார் 11 பேர் கடலுார் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரித்தில் உணவு ஒவ்வாமையால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது.
Advertisement