60 மணிநேரத்தில் 2 நாடுகள், 15 நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி

ஜெர்மனி மற்றும் அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பியுள்ளார்.
ஜெர்மனியில் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிரதமர் மோடி, பல்வேறு விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். குறிப்பாக உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் இந்தியாவில் இருந்தாலும், சர்வதேச கரியமில வாயு வெளியீட்டில் இந்தியாவின் பங்கு வெறும் 5
சதவிகிதம்தான் என்றார்.
இயற்கையுடன் இணைந்த வாழ்க்கைமுறையே இதற்கு காரணம் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடியை அபுதாபி  ஆட்சியாளர் ஷேக் முகமது பின் சயீத் விமான நிலையத்தில் நேரில் வரவேற்றார். அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விமானநிலையத்திற்கே வந்து பிரதமர் மோடியை சந்தித்து உரையாடினர்.
image
அப்போது அவர், அமீரகத்தின் முன்னாள் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத்தின் மறைவுக்கு மோடி இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். இதனை தொடர்ந்து நேற்றிரவு பிரதமர் மோடி டெல்லி வந்தடைந்தார். 60 மணி நேர வெளிநாட்டு பயணத்தில் பிரதமர் மோடி 15 நிகழ்ச்சிகளில் பங்கேற்று நாடு திரும்பி உள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.