லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முதலீட்டு நிறுவனமான, ஜூபிடர் ஃபண்ட் மேனேஜ்மென்ட் பிஎல்சி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஆண்ட்ரூ ஃபார்மிகா தனது பணியைத் திடீரென ராஜினாமா செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அனைத்தையும் தாண்டி பணியை ராஜினாமா செய்த பின்பு என்ன செய்யப்போகிறார் என்பது தான் அனைவரையும் தூக்கி வாரிப்போட்ட விஷயமாக உள்ளது.
நான் இருக்கும் வரை நடக்காது.. Zoho ஸ்ரீதர் வேம்பு அதிரடி..!
ஆண்ட்ரூ ஃபார்மிகா
2019 ஆம் ஆண்டில் 68 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதி மேலாண்மை நிறுவனமான ஜூபிடர் ஃபண்ட் மேனேஜ்மென்ட்-ல் உயர் பதவியான சிஇஓ பதவியில் ஃபார்மிகா பணியில் சேர்ந்தார். இந்நிலையில் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி தனது பதவியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜூபிடர் ஃபண்ட் மேனேஜ்மென்ட்
இந்நிலையில் ஜூபிடர் ஃபண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரியான மேத்யூ பீஸ்லி புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்க உள்ளார். மேலும் ஃபார்மிகா சிஇஓ பதவியில் இருந்து மட்டும் அல்லாமல் இம்முதலீட்டு நிறுவனத்தின் இயக்குனர் பதவியில் இருந்து விலக உள்ளார்.
சிஇஓ பதவி
ஃபார்மிகா தனிப்பட்ட காரணங்களுக்காகத் தனது சிஇஓ பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும், தனது வயதான பெற்றோருடன் இருக்கத் தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
30 வருடம் பிரிட்டன்
பிரிட்டன் நாட்டில் சுமார் 30 வருடங்கள் பல நிறுவனத்தின் பல பதவிகளில் பணியாற்றி வந்த ஃபார்மிகா, மார்ச் 2019 இல் ஜூபிடர் ஃபண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் இணைந்து தற்போது பதவியும் விலக உள்ளார்.
பல முக்கிய நிறுவனம்
ஜூபிடர் ஃபண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்திற்கு முன், அவர் ஜானஸ் ஹென்டர்சன் குரூப் பிஎல்சி உடன் பணிபுரிந்தார், மேலும் 2017 இல் அமெரிக்க ஃபண்ட் ஹவுஸ் ஆன ஜானஸ் மற்றும் யு.கே. ஹென்டர்சன் இணைப்பில் முக்கியப் பங்கு வகித்தார்.
கடற்கரை
அசர்ட் மேனேஜர் பணியில் சுமார் 27 வருடம் அனுபவம் கொண்ட ஆண்ட்ரூ ஃபார்மிகா அக்டோபர் 1ஆம் தேதிக்கு பின்பு என்ன செய்யப்போகிறார் எனக் கேட்டதற்கு. “நான் கடற்கரையில் ரிலாக்ஸ் ஆக உட்கார்ந்து இருக்க விரும்புகிறேன்,” என்று கூறியுள்ளார்.
இந்திய முதலீட்டுக்கு ஆப்பு வைத்த மொரிஷியஸ்.. கடைசியில் இதுவும் போச்சா..?!
Andrew Formica CEO of Jupiter Fund resigned job just to Sit At The Beach And Do Nothing
Andrew Formica CEO of Jupiter Fund resigned job just to Sit At The Beach And Do Nothing $68 பில்லியன் நிறுவனம்.. சிஇஓ பதவியைத் தூக்கி எறிந்த ஃபார்மிகா.. என்ன செய்யப் போகிறார் தெரியுமா?