தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் டாஸ்மாக் மதுக்கடைகளில் தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் கடைபிடிக்க வேண்டும் எனவும் முகக்கவசம் அணிந்து வரும் நபர்களுக்கு மட்டுமே மதுபானங்களை வழங்க வேண்டும் என நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது டாஸ்மாக் பணியாளர்களுக்கு 100% தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடை பணியாளர்கள் 100% தடுப்பூசி எடுத்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் எனவும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விவரத்தினை அனுப்புமாறும் தமிழ்நாடு வாணிபக் கழகம் உத்தரவிட்டுள்ளது.