Gold price: செம சர்பிரைஸ் கொடுத்த தங்கம்.. இன்று எவ்வளவு குறைஞ்சிருக்கு?

தங்கம் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் காணாமல் சர்வதேச சந்தையில் காணப்படுகிறது. ஆனால் முதலீட்டாளர்களுக்கு பெரும் சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக ஆபரணத் தங்கம் விலையானது பெரியளவில் சரிவில் காணப்படுகிறது.

தாய் அங்கன்வாடி ஊழியர்.. மகனுக்கு ரூ.1.8 கோடி சம்பளம்.. ஓரே நேரத்தில் 3 நிறுவனத்தில் வேலை..!

தற்போதைய சர்வதேச சந்தை நிலவரம் என்ன? இந்திய கமாடிட்டி சந்தையில் என்ன நிலவரம்? ஆபரண தங்கம் விலை எப்படி இருக்கு? வாருங்கள் பார்க்கலாம்.

டாலர் ஏற்றமா?

டாலர் ஏற்றமா?

தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து வலுவடைந்து வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது. இது முதலீட்டாளர்களுக்கு வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது. எனினும் டாலரின் மதிப்பில் ஏற்படும் சிறு மாற்றம் கூட தங்கம் விலையில் பிரதிபலிக்கலாம்.

முதலீடுகள் சரியலாம்

முதலீடுகள் சரியலாம்

வலுவான டாலர் மதிப்பால், டாலரில் தங்கம் வாங்குவோருக்கு தங்கம் விலையானது விலை உயர்ந்ததாக மாறியுள்ளது. இது தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது. இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ரெசசன் அச்சம்
 

ரெசசன் அச்சம்

தொடர்ந்து சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதனை இன்னும் அதிகரிக்கவே சர்வதேச மத்திய வங்கிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இது மேற்கொண்டு ரெசசனை ஊக்குவிக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதற்கிடையில் தங்கம் விலையினை நீண்ட கால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவனிக்க வேண்டிய காரணிகள்

கவனிக்க வேண்டிய காரணிகள்

அமெரிக்க பணவீக்கம், வட்டி அதிகரிப்பு, ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை, பத்திர சந்தை, ரஷ்ய தங்கத்திற்கு தடை என பல காரணிகளும் கவனிக்கப்பட வேண்டிய காரணிகளாக உள்ளன. ஆக இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக உக்ரைன் ரஷ்யா போரும் பெரும் பங்கு வகிக்கும் முக்கிய காரணியாக உள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம்

சர்வதேச சந்தை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தடுமாறி வரும் நிலையில், இந்திய சந்தையில் சற்று குறைந்தே காணப்படுகிறது. வெள்ளி விலையும் சற்று சரிவிலேயே காணப்படுகிறது. ஆக முதலீட்டு ரீதியாகவும் இது குறைந்த விலையில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 50,502 ரூபாயாகவும், டாலரின் அவுன்ஸூக்கு 1821 டாலர் என்ற லெவலிலும் காணப்படுகின்றது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் பெரியளவில் மாற்றம் இல்லாத நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 37 ரூபாய் குறைந்து, 4733 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 296 ரூபாய் குறைந்து, 37,864 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று சரிவினைக் கண்டு காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, 5163 ரூபாயாகவும், இதே சவரனுக்கு , 41,304 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 51,630 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலை சரிவினைக் கண்டுள்ள நிலையில், ஆபரண வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 30 பைசா குறைந்து, 65.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 653 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து, 65,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold prices fall amid dollar stronger: is it a right time to buy?

With no major change in the international market, the price of jewellery gold in Chennai today fell by Rs 296 per razor to Rs 37,864.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.