அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கில், தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தது. மேலும் அதிமுகவில் புதிதாக எந்த தீர்மானங்களையும் நிறைவேற்ற கூடாது என்றும், ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 திருமணங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து.
அதன்படி, கடந்த 23ஆம் தேதி நடந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் வருகின்ற ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும், அந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் ஒற்றை தலைமை தேர்ந்தெடுக்கப்படுவதற்கு விவாதம் செய்யப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகிறது.
இந்த நிலையில், அதிமுகவின் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி ஏற்கனவே தொடர்ந்து இருந்த வழக்கில், தற்போது கூடுதலாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொது குழு கூட்டம் நடத்தக்கூடாது என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த மனுவில் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி கே பழனிசாமி ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து உரிமையியல் நீதிமன்றம், இந்த மனுக்கள் குறித்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.