இந்தியாவின் மிஸ்டர்.கிளீன் : சினிமா ஆகிறது வாஜ்பாய் வாழ்க்கை

இந்திய வரலாற்றில் தூய்மையான அரசியல்வாதி என்று பெயரேடுத்தவர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாஜ். பாரதிய ஜனதா கட்சியை கட்டமைத்து உருவாக்கிய முக்கிய தலைவர்களில் ஒருவர். எதிர்கட்சியினாலும் கொண்டாடப்பட்டவர். மூன்று முறை பாரத பிரதமாக இருந்த அவர், அப்துல் கலாம் ஜனாதிபதியாக காரணமாக இருந்தவர், கார்கில் போரில் வெற்றி கண்டவர். அணுகுண்டு பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியவர்.

அப்படிபட்டவரின் வாழ்க்கை 'தி அன்டோல்ட் வாஜ்பாய்: பொலிடீஷ்யன் அண்ட் பாரடாக்ஸ்' என்ற பெயரில் புத்தகமாக எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு வாஜ்பாயின் வாழ்க்கை சினிமா ஆகிறது. படத்திற்கு 'அடல்' என்று டைட்டில் வைத்துள்ளனர்.

தற்போது நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வாஜ்பாய்க்கு 99வது பிறந்த நாள் அன்று படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். மேற்கண்ட தகவலை படத்தை தயாரிக்கும் வினோத் பானுஷாலி தெரிவித்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.