உலக அளவில் பணியாளர்களை நியமிக்கும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு நாடுகளுக்கு மாற்றலாகி செல்லும் நிலையில் எந்தெந்த நாடுகளில் அவர்களுக்கு அதிக செலவு ஆகிறது என்பது குறித்த சர்வே ஒன்று சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கை முறை, வீட்டு வசதி, பொருட்களின் விலைவாசி, பாதுகாப்பு, கல்வி தரநிலை ஆகியவை மதிப்பிடப்பட்டு இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உலகின் மிகவும் விலையுயர்ந்த நகரங்கள் பட்டியலில் நிச்சயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
அன்றாட செலவு
உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் உக்ரைன் – ரஷ்யா போர் உள்பட பல்வேறு காரணங்களால் பணவீக்கம் மற்றும் நாணய ஏற்ற இறக்கம் சர்வதேச பொருளாதாரத்தை பாதித்து வருகிறது. இந்த பாதிப்பு ஒவ்வொரு மனிதரின் அன்றாட வாழ்க்கை செலவையும் பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக செலவாகும் நகரங்கள்
இந்த நிலையில் உலக அளவில் பணியாளர்களை நியமனம் செய்யும் நிறுவனங்களுக்கு அந்த நிறுவனங்களின் ஊழியர்களின் நிதிநிலையில் அக்கறை காட்டுவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் உலக அளவில் மிகவும் அதிகம் செலவாகும் நகரங்கள் குறித்த சர்வே ஒன்றை தனியார் நிறுவனம் ஒன்று எடுத்துள்ளது.
ஹாங்காங் முதலிடம்
இந்த சர்வேயின் படி 2022ஆம் ஆண்டில் உலக அளவில் அதிகம் செலவாகும் நகரங்களின் பட்டியலில் ஹாங்காங் முதலிடத்தை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து சூரிச் மற்றும் ஜெனீவா ஆகிய நகரங்கள் இரண்டாவது, மூன்றாவது இடங்களில் உள்ளது. உலக அளவில் மிகவும் குறைவாக செலவாகும் நகரமாக அங்காரா நகரம் தேர்வு உள்ளது.
10 காஸ்ட்லி நகரங்கள்
இந்த நிறுவனத்தின் சர்வேயின்படி உலக அளவில் அதிக செலவாகும் முதல் 10 நகரங்களின் பட்டியல் இதோ:
1. ஹாங்காங்
2. ஜூரிச்
3. ஜெனீவா
4. பெசல்
5. பெர்ன்
6. டெல் அவில்
7. நியூயார்க்
8. சிங்கப்பூர்
9. டோக்யோ
10. பீஜிங்
இந்திய நகரங்கள்
இந்தப் பட்டியலில் இந்தியாவின் மும்பை நகரம் 127 வது இடத்தைப் பெற்றுள்ளது என்பதும், தலைநகர் டெல்லி 155வது இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெங்களூரு 178வது இடத்தையும், ஹைதராபாத் 192வது இடத்தையும், புனே 201வது இடத்தையும் பிடித்துள்ளது.
கடைசி இடம்
இந்தப் பட்டியலில் அங்காரா என்ற நகரம் கடைசி இடத்தை அதாவது 227வது இடத்தைப் பிடித்துள்ளது. உலகில் மிகவும் குறைவாக செலவாகும் நகரங்களாக இஸ்லாமாபாத், கராச்சி, இஸ்தான்புல் ஆகிய நகரங்களும் உள்ளன.
கணக்கிடப்படுவது எப்படி?
ஒரு நகரத்தில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்க்கை முறை, அந்த நகரத்தின் வளர்ச்சி ஆகியவைகளை கணக்கிட்டு இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஊழியர்களின் அன்றாட வாழ்க்கைச் செலவு, வீட்டுவசதி, பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுச்சூழல், கல்வி தரநிலைகள், நகரத்தின் நிர்வாகம் ஆகியவையும் கணக்கில் கொண்டு இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The most expensive cities in the world for international employees?
The most expensive cities in the world for international employees? | இந்த நகரங்களில் பணிபுரிந்தால் பர்ஸ் காலி… உலகில் அதிக செல்வாகும் நகரங்கள் எவை எவை?