உயிர் காக்கும் பணியைசெய்வதால், கடவுளுக்குஇணையாக மதிக்கப்படுபவர்கள் டாக்டர்கள். உடலில் ஏதாவதுஒரு பிரச்னை ஏற்பட்டால்,நாம் நாடிச் செல்வது டாக்டரை தான். .
இவர்களது சேவைகளுக்கு நன்றிதெரிவிக்கும் விதமாகவும்,டாக்டர்கள் மருத்துவத் துறைக்கு செய்யும் அர்ப்பணிப்பை நினைவுபடுத்திக் கொள்ளும் வகையிலும் ஜூலை 1ம் தேதி, டாக்டர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஏன் ஜூலை 1 மேற்கு வங்கத்தின் 2வது முதல்வராக பதவி வகித்தவர் டாக்டர் பி.சி. ராய். சுதந்திர போராட்ட வீரராக மட்டுமல்லாமல், சிறந்த டாக்டராகவும் பணியாற்றிய இவர் பிறந்ததும், மறைந்ததும் ஜூலை முதல் தேதியில் தான். மருத்துவம், அரசியல், நிர்வாகம், கல்வி என தான் பங்கெடுத்த அனைத்து துறைகளிலும் பிறருக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார். இவரது சேவையை கவுரவிக்கும் விதமாக இவரது பிறந்த தினம் ‘தேசிய டாக்டர்கள் தினமாக’ கடைபிடிக்கப்படுகிறது.
மருத்துவம், அறிவியல், கலை, இலக்கியம் போன்ற துறைகளில் சாதனை செய்தவர்களுக்கு ‘பி.சி.ராய் தேசிய விருது’ வழங்கப்படுகிறது.
Advertisement