இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 32 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய கட்டணங்கள் 22 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேருந்து கட்டண அதிகரிப்பு
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை முழுவதும் தனியார் பேருந்து பயணங்கள் நேற்று முன் தினம் முதல் முழுமையாக முடக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்திருந்தது.
இதனையடுத்து பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.
அத்துடன் ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 30 வீதத்தால் அதிகரிக்கப்படும் என குறித்த சங்கம் கூறியிருந்தது.
இந்த நிலையிலேயே தற்போது பேருந்து கட்டணம் 22 சதவீதத்தால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.