கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட அமர்நாத் பனிலிங்க தரிசனம் இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டதால் இன்று அதிகாலை 4 ஆயிரத்து 890 பக்தர்களின் முதல் குழு புறப்பட்டுச் சென்றது.
பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்காக 43 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 11ம் தேதி யாத்திரை முடிவுக்கு வரும்.பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து அமர்நாத் யாத்திரை குழுவை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதால் பக்தர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க யாத்திரை செல்லும் வழிநெடுக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.