இலங்கைக்கு அவசர நிதியாக IMF வழங்கும் ஒரு பில்லியன் டொலர்


இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் கையிருப்பை வழங்க சர்வதேச நாணய நிதியம் தயாராகவுள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி அரச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கேற்ப இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு உதவ எதிர்பார்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலர்

இலங்கைக்கு அவசர நிதியாக IMF வழங்கும் ஒரு பில்லியன் டொலர் | Sri Lanka Has1 Billion In Debt From The Imf

01 பில்லியன் கடன் கையிருப்பை வழங்க சர்வதேச நாணய நிதியம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்தன.

கடனாக அன்றி கையிருப்பாக அந்த நிதி வைப்புச் செய்யப்படவுள்ளதோடு இதன் மூலம் வெறுமையாக உள்ள இலங்கை கையிருப்பு ஒரு பில்லியன் டொலர்களாக உயர இருக்கிறது. இதனூடாக வேறு நாடுகளின் உதவிகளை பெற வாய்ப்பாக அமையுமென அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அண்மையில் நாட்டுக்கு வந்தது.

அதிகரிக்கும் மத்திய வங்கியின் கையிருப்பு

இலங்கைக்கு அவசர நிதியாக IMF வழங்கும் ஒரு பில்லியன் டொலர் | Sri Lanka Has1 Billion In Debt From The Imf

இந்தக் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமதர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதி அமைச்சு அதிகாரிகள், எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்தனர்.

ஒரு வார காலம் நாட்டியில் தங்கியிருக்கும் இப் பிரதிநிதிகள் குழு நிறைவேற்று பணிக்குழாம் மட்டத்திலான உடன்படிக்கையை எட்டுவது தொடர்பாகவும் மற்றும் கொள்கை ரீதியான விடயங்கள் தொடர்பிலும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

பிரதமர், நிதி அமைச்சு, மத்திய வங்கி மற்றும் ஏனைய பொருளாதார அதிகாரிகள், நிபுணர்களுடனான கலந்துரையாடல்கள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து அவர்கள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.