இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு: 4 ஆண்டுகளுக்குள் நடக்கவுள்ள 5-வது தேர்தல்!


இஸ்ரேல் நாடாளுமன்றம் 4 ஆண்டுகளுக்குள் ஐந்தாவது தேர்தலை நடத்த உள்ளது.

இஸ்ரேலில் இன்று எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தைக் கலைத்ததால், நான்கு ஆண்டுகளுக்குள் நாட்டில் ஐந்தாவது பிரதமர் தேர்தல் நடக்கவுள்ளது.

இஸ்ரேலின் நாடாளுமன்றமான நெசெட் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேலின் மிகக் குறுகிய காலம் பிரதமராக இருந்த நஃப்தலி பென்னட் பதவி விலகுகிறார்.

இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் 1-ஆம் திகதி புதிய பிரதமருக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுவரை, வெளியுறவு மந்திரி யாைர் லாபிட் (Yair Lapid) நள்ளிரவில் தற்காலிக பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு: 4 ஆண்டுகளுக்குள் நடக்கவுள்ள 5-வது தேர்தல்! | Israel Parliament Dissolved Fifth Election4 Years Yair Lapid

அவர் அந்த பதவியை வகிக்கும் 14-வது நபராவார்.

ஹங்கேரியில் பிறந்த தந்தை ஹோலோகாஸ்டில் இருந்து தப்பிய லாபிட் (58), பாராளுமன்ற வாக்கெடுப்புக்குப் பிறகு உடனடியாக ஜெருசலேமின் யாட் வஷெம் ஹோலோகாஸ்ட் நினைவு மையத்திற்குச் சென்றார்.

“இஸ்ரேலை எப்போதும் வலுவாகவும், தன்னைத் தானே தற்காத்துக் கொள்ளவும், அதன் குழந்தைகளைப் பாதுகாக்கும் திறனுடனும் இருப்பேன் என்று எனது மறைந்த தந்தைக்கு அங்கு உறுதியளித்தேன்” என்று லாபிட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெளியேறும் பிரதமரும், மத தேசியவாதியான பென்னட், தான் வரப்போகும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், அரசியலில் இருந்து பின்வாங்குவதாகவும், “டோடா” (நன்றி) என்ற ஹீப்ரு வார்த்தையை ட்வீட் செய்துள்ளார்.  

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.