கொரோனா வந்தால் என்ன? ரெசசன் வந்தால் என்ன? நாங்கள் வாங்குவதை வாங்கிக் கொண்டு தான் இருப்போம் என தங்கத்தினை வாங்கி வரும் மக்கள் மத்தியில், விலை குறைந்தால் இன்னும் ஆர்வம் அதிகரிக்கலாம்.
எனினும் சமீப மாதங்களாக தங்கம் விலையானது பெரியளவில் அதிகரிக்கவும் செய்யாமல், குறையவும் செய்யாமல் ரேஞ்ச் பவுண்டாகவே இருந்து வருகின்றது.
இந்த நிலையில் இன்றைய நிலவரம் என்ன? தங்கம் விலை கூடுமா? குறையுமா? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன?
Gold price: செம சர்பிரைஸ் கொடுத்த தங்கம்.. இன்று எவ்வளவு குறைஞ்சிருக்கு?

ஏன் அழுத்தம்?
அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், டாலரின் மதிப்பும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இதுவும் தங்கம் விலை அழுத்தத்தினை காண வழிவகுத்துள்ளது.
எனினும் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் என்பது தங்கத்தின் விலையில் ஊக்கத்தினை அளிக்கலாம்.
அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், டாலரின் மதிப்பும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இதுவும் தங்கம் விலை அழுத்ததினை காண வழிவகுத்துள்ளது.
எனினும் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் என்பது தங்கத்தின் விலையில் ஊக்கத்தினை அளிக்கலாம்.

வெள்ளி விலையும் அழுத்தம்
தங்கம் விலையினை போலவே, வெள்ளி விலையும் அழுத்தத்தில் காணப்படுகின்றது. அமெரிக்காவின் ஜிடிபி தரவானது -1.6% ஆக சரிவினைக் கண்டுள்ளது. இது -1.5% ஆக எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்ந்து வளர்ச்சி மெதுவாக இருந்து வரும் நிலையில், இது ரெசசனுக்கு தள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் பெரியளவில் மாற்றம் இல்லாத நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 4683 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 37,464 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று மாற்றமில்லாமல் காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 5109 ரூபாயாகவும், இதே சவரனுக்கு , 40,872 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 51,090 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலையும் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 65.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 653 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு, 65,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
gold price today: yellow metal to remain range bound on slowdown fears
With no major change in the international market, the price of jewelery gold is still unchanged at Rs 37,464 per 8 gram.