உதய்பூரில் தையல்காரர் கன்னையா லாலை படுகொலை செய்த கொலைகாரர்கள்இ பாகிஸ்தானின் தாவத் இ ஸ்லாமி தீவிரவாத அமைப்புடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொலையாளிகளில் ஒருவன் 2014 ஆம் ஆண்டு கராச்சிக்கு சென்று அந்த தீவிரவாத அமைப்பினரை சந்தித்து வந்துள்ளதாக ராஜஸ்தான் டிஜிபி லாத்தெர் ஜெய்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கொலையாளிகளுடன் தொடர்பில் இருந்த மேலும் 3 பேரை கைது செய்து விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.