சி.பி.எஸ்.இ மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ வாரிய 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 15-ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு 2021-22ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் மற்றும் பொதுத் தேர்வுகளை இரண்டு பருவங்களாக பிரித்து சி.பி.எஸ்.இ மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ நடத்தியது.
தமிழகம் உள்ளிட்ட ஏராளமான மாநிலங்களில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், ‘சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ பொதுத்தேர்வு முடிவுகளை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.