வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகளை, ஜூலை 15ம் தேதிக்குள் வெளியிட, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ., எனப்படும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் திட்டமிட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிகளை பெரும்பாலான மாநில கல்வி வாரியங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில், ஜூலை 15ம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிடுவதாக, சி.பி.எஸ்.இ., மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ., வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இது குறித்து அதிகாரிகள் கூறியுள்ளதாவது: கொரோனா வைரஸ் பரவலால், 2021 – 2022ம் கல்வியாண்டில் மட்டும், பொதுத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டன. அதன்படி மாணவர்களின் மதிப்பெண்கள் தொகுக்கப்பட்டு, அவர்களுக்கான மதிப்பீடுகள் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்தத் தகவல்களை, நாடு முழுதும் உள்ள பள்ளிகளில் இருந்து பெற காலதாமதம் ஆனதால், தேர்வு முடிவுகளை வெளியிடுவதும் தாமதமாகியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement