4 மாதங்களுக்கு பிறகு சீனாவின் தலைநகரான பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்கள் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல் அந்நகரங்களில் கொரோனா தொற்று பரவிய நிலையில், தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும், பொருளாதாரமும் பாதிப்பிற்குள்ளாகின.
இந்நிலையில், பீஜிங், ஷாங்காயில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதுடன், நாடு முழுவதும் 22 பேருக்கு மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.