ஆதார் அட்டையுடன் பல்வேறு ஆவணங்களை இணைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் ஆதார் அட்டையுடன் பான்கார்டை இணைக்க அவகாசம் கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது அபராதத்துடன் இணைக்கப்பட்டு வருகிறது.
தாய் அங்கன்வாடி ஊழியர்.. மகனுக்கு ரூ.1.8 கோடி சம்பளம்.. ஓரே நேரத்தில் 3 நிறுவனத்தில் வேலை..!
இந்த நிலையில் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்புக்கு இரு மடங்கு அபராதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை
இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை என்பது அத்தியாவசிய தேவை என்ற நிலையில் இந்த ஆதார் அட்டையை பல்வேறு ஆவணங்களுடன் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது என்பதை பார்த்து வருகிறோம்.
ஆதார் – பான் இணைப்பு
அந்த வகையில் ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைப்பதற்கான அவகாசம் கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனை அடுத்து மார்ச் 31ம் தேதிக்கு பின்னர் ஆதார் அட்டையுடன் பான் கார்டு இணைப்பவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இரு மடங்கு அபராதம்
இந்த அவகாசமும் நாளையுடன் அதாவது ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஜூலை 1 முதல் ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைக்கும் நபர்களுக்கு இரு மடங்கு அபராதம் அதாவது ரூபாய் 1000 அபராதம் செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இரு மடங்கு அபராதத்தை தவிர்ப்பதற்கு இன்று அல்லது நாளைக்குள் ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைத்துவிட அனைத்து மக்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
இணைக்காவிட்டால் என்ன ஆகும்?
ஆதார் அட்டையுடன் பான் கார்டு இணைக்காவிட்டால் பான்கார்டு செயலற்றதாகிவிடும் என்றும் அந்த நபர் எந்த ஒரு அரசு சார்ந்த வங்கிகளிலும் பான் கார்டை பயன்படுத்த முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போலி பான்கார்டுகள்
வருமான வரித்துறை தகவலின்படி பல போலியான பான் கார்டுகள் புழக்கத்தில் உள்ளது தெரிய வந்ததை அடுத்து ஆதார் அட்டையுடன் பான் கார்டை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆதார் அட்டையுடன் பான் கார்டை எப்படி இணைக்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
எப்படி இணைப்பது?
முதலில் www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குள் செல்ல வேண்டும். அதன்பின் குயிக் லிங்க் பிரிவில், லிங்க் ஆதார் என்ற பட்டனை அழுத்த வேண்டும். அதன்பின் பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் பதிவிட வேண்டும். ஆதார் எண்ணில் குறிப்பிட்டபடி பிறந்த தேதி இருந்தால், அங்குள்ள டிக் பாக்ஸில் டிக்செய்து ஆதார் விவரங்களை சரிபார்க்கலாம். பின்னர் கேப்சா எழுத்துக்களை டைப் செய்து லிங்க்-ஆதார் என்ற பட்டனை கிளிக் செய்தால் ஆதார்-பான் இணைப்பு பணி முடிந்துவிடும்
சரிபார்ப்பது எப்படி?
ஆதார் மற்றும் பான்கார்டு இணைப்பை உறுதி செய்ய incometaxindiaefiling.gov.in/aadhaarstatus என்ற இணையதளத்துக்குள் செல்ல வேண்டும். அதன்பின் பான் எண், ஆதார் விவரங்களை நிரப்ப வேண்டும். வியூ லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் என்ற பட்டனை அழுத்தினால் ஆதார்,பான் இணைக்கப்பட்டதா? என்ற விவரத்தை திரையில் தெரிந்து கொள்ளலாம்.
Double fine for pan and aadhaar link if not done from July 1
Double fine for pan and aadhaar link if not done from July 1 | ஜூலை 1 முதல் இருமடங்கு அபராதம்: உடனே இதை செய்யுங்க!