சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய மனுவை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜூலை 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மனுதாக்கல் செய்திருந்தது. ஏற்கனவே நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் பற்றிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் திங்கள்கிழமை விசாரிப்பதாக நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது.