பர்சனல் தொடங்கி ப்ராஃபஷனல் வரை, விகடன் பத்திரிகையாளர்களின் பலதரப்பட்ட கேள்விகளுக்குச் சளைக்காமல் பிரபலங்கள் பதிலளிக்கும் நிகழ்ச்சி ‘விகடன் பிரஸ்மீட்’. 2018-ல் விஜய் சேதுபதியுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், விஷால், அரவிந்த்சாமி, சிம்பு, கமல், யுவன்ஷங்கர் ராஜா என பல முன்னணி பிரபலங்கள் இதுவரை பங்குகொண்டிருக்கிறார்கள்.
தனது முதல் படமான ‘ஜெயம்’ தொடங்கி மணிரத்னம் இயக்கத்தில் அவர் இப்போது நடித்திருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ வரை திரைத்துறையில் அவரது பல தரப்பட்ட அனுபவங்கள் அனைத்தையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார் ஜெயம் ரவி.
அதில் முதல் பாகம் இன்று சினிமா விகடன் யூடியூப்பில் வெளியாகி உள்ளது, விகடனுக்கும் அவருக்குமான உறவு, அவர் தந்தையின் வளர்ப்பு, ஏன் சினிமாவைத் தேர்ந்தெடுத்தார், ஜெயம் படத்தின் அனுபவங்கள், ரீமேக் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?, மோகன் ராஜா இதுவரை எடுக்க நினைத்து எடுக்காத கதைகள் (படங்கள்) எனப் பலவற்றை பேசியுள்ளார்.
இந்தப் பாகத்தின் இறுதியாக அவர் முதன்முதலில் ஆசையாக வாங்கிய பைக்கை அவருக்கே தெரியாமல் சர்ப்ரைஸாக கொண்டு வந்து அவரையே திறக்க வைத்ததும், “நான் உட்கார்ந்த மாதிரி ஒரு போட்டோ எடுங்க” என்று மனம் நெகிழ்ந்தார் ஜெயம் ரவி.
ஜெயம் ரவி விகடன் பிரஸ் மீட்டின் முதல் பாகத்தை சினிமா விகடனில் கண்டு தங்களின் நிறை குறைகளை கமென்ட் செய்யுங்கள்.