தலைநகர் டெல்லியில் இன்று காலை கனமழை பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் விடாமல் மழை பெய்ததால் பணிக்கு செல்வோர் சிரமத்திற்குள்ளாகினர்.
இதேபோல் உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்திலும் கனமழை பெய்தது. நேற்று இரவு பெய்த கனமழையில் பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியது.
மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளை அடையாளம் கண்டு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ருத்ரபிரயாக் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆயுஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.