நாட்டில் சிறு, குறு, மத்திய தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க புதிய திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இந்திய தொழில்முனைவோர் அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், உள்ளூர்ப் பொருளுற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில் 200 கோடி ரூபாய் வரையிலான கொள்முதலுக்கு உலகளாவிய டெண்டர் விடுவதைத் தவிர்க்கத் தீர்மானித்துள்ளதாகப் கூறினார்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூர் அளவில் தனித்துவமான பொருட்களின் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.