தமிழகம், தெலுங்கானா, குஜராத் மாநிலங்கள் டாப் அச்சீவர்ஸ்.. நிதியமைச்சர் கொடுத்த சர்பிரைஸ்!

வணிக சீர்திருத்த திட்டங்களை முறையாக நடைமுறை படுத்திய மாநிலங்களில் தமிழ் நாடு இடம் பெற்றுள்ளது.

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துதற்கும், அரசின் சேவைகளை மக்கள் அணுகுவதற்கும்ம் சீர்திருத்தங்களை மேற்கொண்ட மாநிலங்களின் பட்டியலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

இந்த பட்டியலில் தமிழ் நாடு, ஆந்திரபிரதேசம், குஜராத், தெலுங்கானா, ஹரியானா, கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.

ஜூலை முதல் வட்டி அதிகரிக்கலாம்.. முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கிடைக்குமா?

சாதனையாளர்கள்

சாதனையாளர்கள்

இந்த பட்டியல் 2020 வணிகச் சீர்திருத்த செயல் திட்டம், 2020ஐ செயல்படுத்தியதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துளார்.

இதே ஹிமாச்சலப் பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஓடிசா, உத்தரகாண்ட், மற்றும் உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் சாதனையாளர்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வணிக சீர்திருத்த செயல் திட்டம்

வணிக சீர்திருத்த செயல் திட்டம்

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் தொழில் செய்வதை எளிதாக்கும் வகையில் தொழில் சீர்திருத்தங்களை செய்வதற்கு, குறிப்பிட்ட வணிக சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் எளிமையாக்கல் செயல்பாடுகளை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தும் மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.

 

வளர்ந்து வரும் வணிக சூழல்
 

வளர்ந்து வரும் வணிக சூழல்

வளர்ந்து வரும் வணிக சூழல் பிரிவில் டெல்லி, புதுச்சேரி, மற்றும் திரிபுரா உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன.

இதில் அந்தமான் நிகோபார், பீகார், சண்டிகர், டாமன், டையூ, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, ஜம்மு & காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் அடங்கும்.

தொழில் சீர்திருத்த செயல்திட்டம் 2020

தொழில் சீர்திருத்த செயல்திட்டம் 2020

BRAP 2020 ஆனது தகவல் பெறுதல், ஒற்றைச்சாளர நடைமுறை, தொழிலாளர், சுற்றுச்சூழல், துறை சார்ந்த சீர்திருத்தங்கள் மற்றும் வழக்கமான தொழிலுக்கான வாழ்க்கை சுழற்சி சார்ந்த பிற சீர்திருத்தங்கள் போன்ற 15 தொழில் ஒழுங்குமுறை பிரிவுகளைக் கொண்ட 301 சீர்திருத்த அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

9 துறைகள் அடையாளம்

9 துறைகள் அடையாளம்

துறை சார்ந்த சீர்திருத்தங்கள் முதன் முறையாக தொழில் சீர்திருத்த செயல்திட்டம் 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் வணிக உரிமம், சுகாதார சேவை, சட்டப்பூர்வ எடை அளவியல், திரையரங்குகள், விருந்தோம்பல், தீயணைப்பு தடையில்லா சான்றிதழ், தொலைத் தொடர்பு, திரைப்படப் படப்பிடிப்பு மற்றும் சுற்றுலா ஆகிய ஒன்பது துறைகளில் 72 சீர்திருத்தங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tamil nadu, telangana and gujarat among top achievers in ease on doing business

Tamil Nadu is among the states that have properly implemented business reform schemes.

Story first published: Thursday, June 30, 2022, 19:47 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.