ரெனால்ட் நிசான் என்ற நிறுவனம் தினமும் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சேமித்து சென்னை மக்களுக்கு சேவை செய்து வருகிறது.
சென்னை ஒரகடத்தில் உள்ள ரெனால்ட் நிசான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (RNAIPL) என்ற நிறுவனத்தின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் தினமும் 50,000 லிட்டர் தண்ணீரை சேமித்து வருகிறது.
இந்த தண்ணீர் சேமிப்பு காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் ஆலைகளுக்கு தண்ணீர் இடையூறு இன்றி கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா தொழிற்சாலையை 1 ரூபாய்க்கு விற்ற ரெனால்ட்.. என்ன காரணம்?
ரெனால்ட் நிசான்
சாக்கடை கழிவுகள் இருந்து தண்ணீரை பிரிக்கும் தொழில்நுட்பத்தால் நீர் விரயம் குறைகிறது என்பது தெரிந்ததே. இந்த தொழில் முறையை ரெனால்ட் நிசான் நிறுவனம் கடைப்பிடித்து வருவதால் தண்ணீர் சேமிப்பு அதிகமாகி தேவை குறைகிறது. இந்நிறுவனத்தின் முயற்சியால் தினமும் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கார் ஆலைகள்
மேலும் கார் உற்பத்தி நிலையங்களில் காரை கழுவும் தண்ணீரின் அளவை குறைத்தல், கார் ஆலைகளில் உள்ள கழிவு நீரை மறுசுழற்சி செய்தல் மற்றும் மறுபயன்பாடு செய்தல், புதுமையான நீர் ஆதாரங்களின் பயன்பாட்டை அதிகரித்தல் ஆகியவை இந்நிறுவனம் செய்து வரும் முயற்சிகள் ஆகும்.
மழைநீர் சேகரிப்பு
குறிப்பாக மழைநீர் சேகரிப்பு குளங்கள் மூலமும் புயல் மற்றும் கன மழை நேரங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமித்து வடிகட்டுதல் ஆகிய பணிகளையும் இந்நிறுவனம் செய்து வருகிறது. இந்த முன்முயற்சிகள் காரணமாக 5.76 லட்சம் கிலோ லிட்டர் மழைநீரையும், 87% நீரையும் சேமிக்க RNAIPL நிறுவனம் செயல்படுத்தியுள்ளது.
ஃபோர்ம் வாஷ்
மேலும் கார்களை கழுவுவதற்கு பாரம்பரியமான முறையை கைவிட்டு ஃபோம் கார் வாஷ் நுட்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், கார் கழுவும் நீர் உபயோகத்தை 45% குறைக்க இந்நிறுவனம் உதவி செய்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நிசான் ஆலையில் தொடங்கப்பட்ட நீண்ட கால முயற்சியான ஃபோர்ம்வாஷ் நிறுவனத்திற்காக RNAIPL செய்த முன்முயற்சி, தற்போது நாடு முழுவதும் உள்ள நிசான் ஆலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மழைநீர் சேகரிப்பு குளங்கள்
இதுகுறித்து ரெனால்ட் நிசான் ஆலையின் எம்டி மற்றும் சி.இ.ஓ பிஜு பாலேந்திரன் அவர்கள் கூறியபோது, ‘மூன்று மழைநீர் சேகரிப்பு குளங்களை நிறுவுதல், பிஆர்வி (அழுத்தத்தை குறைக்கும் வால்வு) நிறுவுதல் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் மறுசுழற்சி அமைப்பு போன்ற பல செலவு குறைந்த நீர் பாதுகாப்பு தீர்வுகளில் எங்களின் முதலீடுகள் தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
ரெனால்ட் நிசான் பசுமை திட்டம்
இது எங்களின் உலகளாவிய ரெனால்ட் நிசான் பசுமைத் திட்டத்தின் செயல்பாடுகளில் ஒன்றாகும். உற்பத்தித் தளங்களில் நீர் உட்கொள்ளலைக் குறைக்கவும், கழிவுநீர் மறுசுழற்சி செயல்திறனை மேம்படுத்தவும் இன்னும் பல ஆய்வுகளை செய்து வருகிறோம். நிச்சயம் எதிர்காலத்தில் இன்னும் அதிகமான தண்ணீரை எங்களால் சேமிக்க முடியும்’ என்றார்.
Renault Nissan’s Chennai plant conserving 50,000 litres of water daily
Renault Nissan’s Chennai plant conserving 50,000 litres of water daily | தினமும் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சேமிப்பு: சென்னை மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனம்!